காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2018 4:15 AM IST (Updated: 8 April 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று நாமக்கல்லில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லில் நேற்று தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அவை தலைவர் சீனிவாசன், பொருளாளர் சத்யா, வடக்கு மாவட்ட அவை தலைவர் முத்துசாமி, பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் செல்வி, சிவா, ராஜாகவுண்டர், பொங்கியண்ணன், விஜய்கமல், தனலட்சுமி, செயற்குழு உறுப்பினர்கள் சவுந்தர்ராஜன், ராமகிருஷ்ணன், ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு உரிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காவிரி நீர் கிடைக்காவிட்டால் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் தூக்குப்போட்டு சாக வேண்டிய நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக கலப்பை, மண்வெட்டி உள்ளிட்ட விவசாய உபகரணங்களுடன் கழுத்தில் தூக்குகயிறுகளுடன் 3 தொண்டர்கள் ஒரு வாகனத்தில் நின்று கொண்டு இருந்தனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார் நன்றி கூறினார்.


Next Story