காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஒரத்தநாடு அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் திடீரென தபால் நிலையத்துக்கு பூட்டுப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
ஒரத்தநாடு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் ஓ.என்.ஜி.சி எதிர்ப்புக்குழு சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து காவிரி மீட்புக்குழுவில் அங்கம் வகிக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சங்க மாவட்ட செயலாளர் ஜெகதீசன் தலைமையில் விவசாயிகள் நேற்று காலை ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூரில் மறியலில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக வந்தனர். அப்போது விவசாயிகள் திடீரென அங்குள்ள தபால் நிலையத்தில் உள்ளே இருந்த அலுவலரை வைத்து அலுவலகத்தை பூட்டுப்போட்டு பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் திடீரென பட்டுக்கோட்டை-தஞ்சை சாலையின் குறுக்கே அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டவாறு மறியலில் ஈடுபட்டனர்.
27 பேர் கைது
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட விவசாயிகள் 27 பேரை
ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளால் பூட்டப்பட்ட தபால் நிலையத்தை போலீசார் திறந்தனர்.

Related Tags :
Next Story