வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து கார் டிரைவர் சாவு-மனைவி படுகாயம்
வாணியம்பாடி அருகே மின்கம்பத்தின் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் மின்வயர் அறுந்து மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் மீது விழுந்தது.
வாணியம்பாடி,
கார் டிரைவர் மின்சாரம் பாய்ந்து பலியானார். அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பொன்னரசு (வயது 45). கார் டிரைவர். இவரது மனைவி சாந்தி. இவர், வாணியம்பாடி அருகே பெருமாள்பட்டியில் உள்ள ஷூ தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். தினமும் பொன்னரசு மனைவி வேலைக்கு செல்லும்போது அவரை மோட்டார்சைக்கிளில் அழைத்துச்செல்வார்.
அதன்படி நேற்று மோட்டார்சைக்கிளில் மனைவியை அமரவைத்துக்கொண்டு வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அரியானா மாநிலத்திலிருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் உள்ள உயரழுத்த மின்கம்பத்தின் மீது மோதியது.
அப்போது அதிலிருந்து அறுந்த மின்வயர்கள் மோட்டார்சைக்கிளில் அந்த இடத்தை கடக்க முயன்ற பொன்னரசு மற்றும் அவரது மனைவி மீது விழுந்தது. அதில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பொன்னரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். மனைவி சாந்தி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இந்த விபத்து காரணமாக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்த மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினர். இதனை தொடர்ந்து சாந்தியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது குறித்து வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பொன்னரசுவின் தந்தை ஜான், அமைச்சர் நிலோபர்கபிலின் தந்தையிடம் வேலைபார்த்து வந்தார். தகவல் அறிந்த அமைச்சர் நிலோபர் கபில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து அங்கு பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பொன்னரசுவின் உடலை பார்த்தார். தலையில் கைவைத்து கதறி அழுதார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொன்னரசுவின் மனைவி சாந்தியை பார்த்து ஆறுதல் கூறி டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

Related Tags :
Next Story