கோவில் உண்டியலை உடைத்து ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது


கோவில் உண்டியலை உடைத்து ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 April 2018 4:33 AM IST (Updated: 8 April 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

தானே மாவட்டம், பிவண்டி தாலுகா தகடி - காமத்கர் பகுதியில் கதுஷியாம் பாபா கோவில் உள்ளது. சம்பவத்தன்று காலை கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது.

தானே,

கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சம்பவம் குறித்து தானே போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து உண்டியலில் திருடிய ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 

Next Story