173-வது வார்டு இடைத்தேர்தல் சிவசேனா வேட்பாளர் வெற்றி


173-வது வார்டு இடைத்தேர்தல் சிவசேனா வேட்பாளர் வெற்றி
x
தினத்தந்தி 8 April 2018 4:40 AM IST (Updated: 8 April 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சியின் 173-வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் பிரலாட் ஆம்பா டோம்ரே.

மும்பை,

பிரலாட் ஆம்பா டோம்ரே கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த வார்டுக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்தநிலையில் நேற்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் சிவசேனா சார்பில் போட்டியிட்ட ராம்தாஸ் காம்ளே 6 ஆயிரத்து 616 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஷெட்டி சிவசேனா வேட்பாளரை விட 845 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.

வெற்றி பெற்ற சிவசேனா வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி அஞ்சலி போஸ்லே சான்றிதழை வழங்கினார். இடைத்தேர்தலின் வெற்றியை சயான், பிரதீக்சாநகர் பகுதியில் சிவசேனா கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். 

Next Story