திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசூர்,
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அந்திலி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 33). இவர் கடந்த 24-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் திருவெண்ணெய்நல்லூர் வந்தார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர். இதேபோல் பெரியசெவலையை சேர்ந்த மூர்த்தி (54) என்பவர் அந்த பகுதியில் நிறுத்தியிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளையும் மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த தனித்தனி புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சின்னசெவலை அரசு கலைக்கல்லூரி முன்பு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் டி.மலவராயனூரை சேர்ந்த காளிதாஸ் (31) என்பதும், இவர் மடப்பட்டை சேர்ந்த சசிகுமார்(21) என்பவருடன் சேர்ந்து சஞ்சய், மூர்த்தி ஆகியோரது மோட்டார் சைக்கிளை திருடியதும், மேலும் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காளிதாஸ், சசிகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 7 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story