சாலமங்கலம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், பொதுமக்கள் வேண்டுகோள்


சாலமங்கலம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 April 2018 3:15 AM IST (Updated: 9 April 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

சாலமங்கலம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள சாலமங்கலம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் 5 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் கோரி தினந்தோறும் சாலமங்கலத்தை சுற்றி உள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மழை காலத்தில் கட்டிடத்தின் சுவர் வழியாக தண்ணீர் உள்ளே வருவதால், சுவர் இடியும் நிலையில் உள்ளது.

இந்த அலுவலகத்தில் சான்றிதழ் கோரி வரும் பொதுமக்களுக்கு கழிவறை வசதிகள் கூட இல்லாததால் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். ஆகவே இந்த கட்டிடத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story