மலையம்பாக்கத்தில் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில் டிரைவர் சாவு


மலையம்பாக்கத்தில் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில் டிரைவர் சாவு
x
தினத்தந்தி 9 April 2018 4:45 AM IST (Updated: 9 April 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

மலையம்பாக்கத்தில் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில் டிரைவர் பலியானார்.

பூந்தமல்லி,

மாங்காடு அடுத்த கோவூர், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 23). லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஜான்சிராணி (20), இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு ரமேஷ் தாம்பரத்தில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு மீஞ்சூர் நோக்கி லாரியை ஓட்டி சென்றார். வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, வடக்கு மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டி ருந்தபோது முன்னால் பொக்லைன் எந்திரம் ஏற்றி சென்ற லாரியின் பின்பகுதியில் இவரது லாரி மோதி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயங்களுடன் லாரியில் சிக்கிய ரமேஷ் வெளியே வர முடியாமல் மயங்கினார். பின்னர் டீசல் டேங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் லாரி டிரைவர் ரமேஷ் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கருகிய நிலையில் இருந்த ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் லாரி அப்புறப் படுத்தப்பட்டது. விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story