மாமல்லபுரத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலி


மாமல்லபுரத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 9 April 2018 3:45 AM IST (Updated: 9 April 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் சங்கரா பல் கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தவர்கள் தேவசந்தர் (வயது 19), துளிபாலாபார்கவ் (19). நேற்று முன்தினம் மதியம் தேவசந்தர், துளிபாலாபார்கவ் உள்பட 17 மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றனர். அனைவரும் கடற் கரை கோவில் அருகே கடலில் குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது தேவசந்தர், துளிபாலாபார்கவ் இருவரையும் ராட்சதஅலை கடலுக்குள் இழுத்து சென்றது.

நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் அதே பகுதியில் தேவசந்தர் உடல் கரை ஒதுங்கியது. மாயமான துளிபாலாபார்கவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாமல்லபுரத்தை அடுத்த தேவநேரி கடற்கரையில் துளிபாலாபார்கவ் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான தேவசந்தர் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர். துளிபாலாபார்கவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். 

Next Story