காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் எம்.பிரகாசம் தலைமை தாங்கினார்.
ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்ஆனந்த், நகர செயலாளர் சசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகர தலைவர் சரவணன், நிர்வாகி காளி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர அமைப்பாளர் அன்பரசு நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் படும் எனக்கூறினர்.

Related Tags :
Next Story