சொத்து தகராறில் உறவினர் கொலை அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை


சொத்து தகராறில் உறவினர் கொலை அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 9 April 2018 3:25 AM IST (Updated: 9 April 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் உறவினரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை வழங்கி புனே செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புனே,

புனே, சிக்காலி பகுதியை சேர்ந்தவர் பானுதாஸ். இவரது அண்ணன் மகன் நவ்நாத் (வயது45). பானுதாசுக்கும், நவ்நாத் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நவ்நாத் தனது தம்பி சோம்நாத்துடன் சேர்ந்து பானுதாசையும் அவரது மகன் விலாசஸ் மற்றும் உறவினர் குலாப்பை துப்பாக்கியால் சுட்டனர். இதில் பானுதாஸ் உயிரிழந்தார். விலாசசும், குலாப்பும் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நவ்நாத், சோம்நாத்தை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை புனே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கு விசாரணை நிறைவில் உறவினரை கொலை செய்த குற்றத்திற்காக அண்ணன், தம்பி இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Next Story