நடைபாதையில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீசார்


நடைபாதையில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீசார்
x
தினத்தந்தி 9 April 2018 3:58 AM IST (Updated: 9 April 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

நடைபாதையில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணிக்கு பெண் போலீசார் உதவி செய்தனர்.

மும்பை,

நடைபாதையில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை, பெண் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

மும்பை கிழக்கு டேரசார் லேன் பகுதியில் உள்ள நடைபாதையில் நேற்று முன்தினம் அதிகாலை கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார். இதுபற்றி பந்த் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெண் போலீசார் அங்கு போலீஸ் வேனில் விரைந்து வந்தனர். உடனடியாக அந்த பெண்ணை மீட்டு போலீஸ் வேனில் ஏற்றி அருகில் உள்ள ராஜவாடி மருத்து வமனையில் சேர்த்தனர்.

சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவம் ஆனது. அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் அம்பா என்பதும், நடைபாதையில் வசித்து வந்ததும் தெரியவந்தது. பிரசவத்திற்கு பின் தாய், சேய் இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அம்பாவின் குடும்பத்தினர் பற்றி தெரியவில்லை. அவரது குடும்பத்தினரை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story