ஜோத்பூர் சிறையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் சல்மான் கானுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
ஜோத்பூர் சிறையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் சல்மான் கானுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மும்பை,
மான்வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஜோத்பூர் மாவட்ட செசன்சு கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதைத்தொடர்ந்து ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சல்மான் கான் ஜோத்பூரில் இருந்து தனியார் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தார்.
இதற்கிடையே சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து தகவலறிந்த அவரது ரசிகர்கள் மும்பை கேலக்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டின் முன்பாக குவிந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.
இந்தநிலையில் சல்மான் கான் மும்பை விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு காரில் வந்து சேர்ந்தார். அப்போது அங்கு கூடியிருந்த அவரது ரசிகர்கள் சல்மான் கானுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்களது ஆதர்ச நாயகன் சிறையிலிருந்து திரும்பியதால் மகிழ்ச்சி பொங்கிய சிலர் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து வீட்டின் பால்கனிக்கு வந்த சல்மான் கான் ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். அதன் பின்னர் இரவாகி விட்டது வீட்டிற்கு சென்று தூங்குங்கள் என சைகை காட்டினார். அப்போது அவரது தந்தை சலீம் கான், தாய் சல்மா கான் ஆகியோர் அவருடன் இருந்தனர்.

Related Tags :
Next Story