காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் மறியலுக்கு முயற்சி
தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் மறியல் செய்ய முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சேலத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் மறியல் செய்ய முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க கோரி தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக உண்ணாவிரதம், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.
இந்தநிலையில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு சேலம் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். போலீசார் இரும்பு தடுப்பு பேரிகார்டர்கள் மூலம் ரெயில் நிலைய நுழைவு வாயில் முழுவதும் அமைத்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மதியம் 12.30 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்ஷா தலைமையில் சேலம் மாவட்ட செயலாளர் சாதிக்பாஷா மற்றும் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரி கோஷங்களை எழுப்பியவாறு தங்கள் கட்சிக் கொடிகளை ஏந்தியபடி ரெயில் நிலையத்திற்குள் புகுந்து, ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது போராட்டக்காரர்களை அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளுவும் நடந்தது. இதனிடையே மற்றொரு வழியாக அந்த கட்சியினா ரெயில் நிலையத்திற்குள் புகுந்து தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதையறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த கட்சியினர் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற 43 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story