நாகர்கோவில், தக்கலையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் மற்றும் தக்கலையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்துவிடக் கூடாது எனவும், உயர் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 20–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச் செய்து விடும் என குற்றம் சாட்டிய தலித் அமைப்புகள் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தின. இந்த போராட்டத்தில் பல மாநிலங்களில் வன்முறை வெடித்தது. தலித் பிரிவினர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் தலித் பிரிவினர் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
குமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவில், தக்கலை போன்ற இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. போராட்டத்துக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் யூசுப்கான், மகளிரணி தலைவி தங்கம் நடேசன், வட்டார தலைவர் காலபெருமாள், அலெக்ஸ், கே.டி.உதயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்று தக்கலை பழைய பஸ் நிலையம் சந்திப்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். வட்டார தலைவர் ஜான் கிறிஸ்டோபர், நகர தலைவர் அனுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில செய்தி தொடர்பாளர் வேலுசாமி கலந்துகொண்டு பேசினார்.
மாவட்ட துணை செயலாளர் ஜாண்இக்னேஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், சேவாதள மாவட்ட தலைவர் லாரன்ஸ், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் குளச்சலில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் காரல்மார்க்ஸ் தலைமையில் குளச்சல் காமராஜர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற் றது. போராட்டத்தின் போது இளைஞர் காங்கிரசார் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொள்வதுபோல் நடித்து நூதன முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story