பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரச்சிற்பங்கள் மாயம்
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பழைய தேரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரச்சிற்பங்கள் மாயமான சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவை சிலை கடத்தும் கும்பலிடம் விற்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தலசயன பெருமாள் கோவில் உள்ளது. இது, 14-ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த கோவிலாகும். 108 வைணவ திவ்ய திருத்தலங்களில் இது 63-வது ஸ்தலமாக உள்ளது.
இந்த கோவிலில் தேக்கு மரத்தால் ஆன, பல நூறாண்டுகளை கடந்த தேர் ஒன்று இருந்தது. சிதிலமடைந்த அந்த தேரில் இருந்து 7 அடி உயரம் உள்ள துவாரபாலகர், குதிரை, சிம்மம், யாளி உள்ளிட்ட 10 மரச்சிற்பங்கள் பிரித்தெடுக்கப்பட்டு, கோவிலின் உள்ளே ஆஞ்சநேயர் சன்னதி ஓரம் தரையில் வைக்கப்பட்டு இருந்தன.
பல நூற்றாண்டுகளை கடந்த இந்த மரச்சிற்பங்கள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மரச்சிற்பங்கள் அனைத்தும் மாயமாகி உள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது. இது பக்தர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவிலில் இருந்து காணாமல் போன பழமையான தேக்கு மரத்தில் செய்யப்பட்ட தொன்மை வாய்ந்த இந்த மரச்சிற்பங்கள், வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்தும் கும்பலிடம் விற்கப்பட்டு உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்படி வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பழமைவாய்ந்த பாரம்பரிய சிற்பங்களுக்கு அங்கு விலை மதிப்பு அதிகம். இங்கிருந்து கடத்தப்படும் சிற்பங்கள், வெளிநாட்டு டாலர்களின் மதிப்பில் கோடிக்கணக்கில் விற்கப்படுகிறது.
சிலை கடத்தும் கும்பலிடம் தொடர்பு வைத்துள்ள தலசயன பெருமாள் கோவில் பணியாளர்கள் சிலர் இந்த மரச்சிற்பங்களை திருடி, பல லட்சம் ரூபாய்க்கு விற்று உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் கோவிலில் இருந்த பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட 5 கிலோ எடையுள்ள மணியும் காணாமல் போயுள்ளது. இதுவும் சிலை கடத்தும் கும்பலிடம் விற்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கோவிலில் உள்ள மரச்சிற்பங்கள் மற்றும் பஞ்சலோகத்தால் ஆன மணி மாயமானது பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது.
இதேபோல் பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் இந்துசமய அறநிலையத்துறையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி பழமைவாய்ந்த சிற்பங்களை விற்ற கோவில் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடத்தப்பட்ட மரச்சிற்பங்களை மற்றும் பஞ்சலோகத்தால் ஆன மணியை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story