காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய பஸ் நிலைய பகுதியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில வக்கீல் அணி துணை செயலாளர் பூவை.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சின்னசாமி தொடக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை கைவிடவேண்டும். தமிழக மக்களின் உணர்வுபூர்வமான, வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணைச்செயலாளர் சாதிக்பாட்சா, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெரம்பலூர் நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தா.பழூர் தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில இளைஞரணி செயலாளர் விவேகன் வரவேற்று பேசினார். முடிவில் தா.பழூர் நகர செயலாளர் பொய்யாமொழி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story