நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்றிதழ் கொடுக்கக்கூடாது, கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் கொடுக்கக்கூடாது என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் 76 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 272 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், 48 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவுகளையும் கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுக்கள் அளித்தனர். போடி அருகே உள்ள பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை பகுதியில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த பகுதியானது, பசுமையான பகுதியாக இருந்தது. கடந்த 30 ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் போதிய மழைப்பொழிவு இன்றி விவசாயத்துக்கு போதிய தண்ணீர் இன்றி விவசாய நிலங்கள் பாலைவனமாகி வருகிறது.
எங்கள் ஊர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மேற்குதொடர்ச்சி மலை பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் கொடுக்கக்கூடாது. மத்திய அரசுக்கு இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், அல்லிநகரம் வள்ளிநகரை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சொந்த வீடு இல்லாமல் வசித்து வரும் 85 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். கடந்த ஆண்டு வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கிய இடத்தில் வனத்துறை சார்பில் சாலி மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. அந்த மரங்களை வெட்டி அகற்றி விட்டு, எங்களுக்கு நிலங்களை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
பெரியகுளம் பி.எம்.சி. காலனியை சேர்ந்த மல்லிகை சங்கமம் ஆண்கள் சுய உதவிக்குழுவை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘பெரிய குளம் நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக தினசரி குப்பைகள் சேகரிக்கும் பணியை ஆண்கள் சுயஉதவிக்குழுவினர் செய்து வருகிறோம். 43 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம்.
தற்போது எங்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த புள்ளி வழங்கப்பட்டு உள்ளதால் 43 பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, எங்களது சுயஉதவிக்குழு மூலமாகவே தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
ஸ்ரீரெங்கபுரம் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளர் சங்கத்தினர் 64 பேர் தங்களுக்கு இலவச தேய்ப்பு பெட்டி வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர். காமாட்சிபுரம் அருகே உள்ள எஸ்.அழகாபுரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊரில் தெரு பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு அளித்தனர்.

Related Tags :
Next Story