வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாதவர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யமுடியாதவர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க 3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடை பெற்றது. ஊட்டி அருகே கேத்தி உல்லாடா பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சங்கத்தின் தேர்தல் அதிகாரி ஜெயந்தி காலை 10 மணிக்கு அலுவலகத்துக்கு வருகை தந்து 11 மணி வரை இருந்தார்.
அப்போது அவரிடம் 7 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர் தேர்தல் அதிகாரி ஜெயந்தி சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் திரும்பி அலுவலகத்துக்கு வரவில்லை. அங்கு வேட்புமனு தாக்கல் செய்ய 6 பேர் நீண்ட நேரம் காத்திருந்தனர். மதியம் 3 மணி வரை ஆகியும் வேட்புமனுக்கள் பெற தேர்தல் அதிகாரி வரவில்லை.
இதனால் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யாத காங்கிரஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆத்திரம் அடைந்த அந்த கூட்டுறவு சங்க அலுவலகத்தின் இரும்பு ஷட்டரை மூடி பூட்டு போட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து பூட்டு போட முயற்சித்தவர்களை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றார்.
இது குறித்து நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பழனிச்சாமி கூறியதாவது:-
உல்லாடாவில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் தேர்தல் அதிகாரி ஜெயந்தி கூட்டுறவு சங்க 3-ம் கட்ட தேர்தலுக்காக வேட்புமனுக்களை 7 பேரிடம் வாங்கினார். இதையடுத்து, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு மதுரை கிளை ஐகோர்ட்டு தடை விதித்ததால், தேர்தல் அதிகாரி வேட்புமனுக்களை வாங்காமல் சென்று விட்டார்.
ஆனாலும், கூட்டுறவு சங்க செயலரிடம் வேட்புமனுக்களை வாங்கலாம் என்று அறிவித்து இருந்தேன். ஆனால், அப்பகுதி மக்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்ட முயற்சி செய்தனர். இதனால் வேட்பு மனுக்கள் பெறப்பட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அங்கு திரண்ட பொதுமக்கள், குறிப்பிட்ட 7 பேரின் வேட்புமனுக்கள் வாங்கப்பட்டு உள்ளது. எனவே கூட்டுறவு சங்க தேர்தலை புறக்கணிப்பதாகவும், இது குறித்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மற்றும் கூட்டுறவு தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story