பிரதமர் மோடிக்கு பச்சைக்கொடி காட்டுவோம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


பிரதமர் மோடிக்கு பச்சைக்கொடி காட்டுவோம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 10 April 2018 3:45 AM IST (Updated: 10 April 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு பச்சைக்கொடி காட்டுவோம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

14 வருடங்களாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி மந்திரிசபையில் தி.மு.க. இடம் பெற்று இருந்தது. காவிரிஆணை சட்டருக்கான சாவியை எடுத்துக்கொள்ள இவர்களுக்கு வாய்ப்பு இருந்தது. அதை விட்டு விட்டு தற்போது நடைபயணம் மேற்கொள்வது தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பது போன்று உள்ளது.

பிரதமர் வரும் போது எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டுவோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம். காவிரி மேலாண்மை பிரச்சினையில் சட்டரீதியாக தேவையான அழுத்தம் கொடுத்து வருகிறோம். காவிரி பிரச்சினை, பாலாறுபிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை ஆகியவைகளில் அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றம் இருந்தது இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால் மத்திய அரசு மீது மக்களுக்கு கோபமும், அதிருப்தியும் ஏற்படுவது உண்மை தான். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story