பிரதமர் மோடி ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
மத்திய அரசை கண்டித்தும், சமூக நல்லிணக்கத்தை பேணிக்காத்திட வலியுறுத்தியும் புதுவை மறைமலையடிகள் சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இதில் கலந்துகொண்ட முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மதநல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி மற்றும் ஒற்றுமை ஏற்பட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு கடந்த 4 வருடங்களாக பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் திட்டமிட்டு தாக்கப்படுகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் ஆளுங்கட்சியே முடக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
இதனால் தமிழகமே கொந்தளித்திருக்கிறது. புதுச்சேரியிலும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத்திய அரசு ஒரு செயல்படாத அரசாக உள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் நாட்டில் சாதி, மத மோதல்கள் நடந்தபோது காந்தி உண்ணாவிரதம் இருந்து அமைதியை ஏற்படுத்தினார்.
அதேபோல் இப்போது நாட்டில் அமைதி ஏற்பட ராஜ்காட்டில் காந்தியடிகள் சமாதியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசார் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அதேபோல் புதுச்சேரியில் நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story