அமைச்சர் விஜயபாஸ்கரின் பாதுகாப்பு அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை அருகே அமைச்சர் விஜயபாஸ்கரின் பாதுகாப்பு அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அன்னவாசல்,
புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று பங்குனி தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நார்த்தாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இந்நிலையில் பூங்குடியை சேர்ந்த பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவிலுக்கு பூங்குடியில் இருந்து ஊர்வலமாக புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொம்மாடிமலை பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்பகுதி வழியாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பூங்குடி பகுதியை சேர்ந்த பெண்களை ஓரமாக செல்லுங்கள் என கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூங்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகளை கண்டித்து, நார்த்தாமலையில் உள்ள புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் மைக்கல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story