நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 10 April 2018 4:00 AM IST (Updated: 10 April 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன்கடை அமைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானவர்கள் வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்து சென்றனர்.

வெள்ள உபரி நீர் கால்வாய் மேம்பாட்டு விவசாயிகள் சங்க செயலாளர் சுதாகர் பாலாஜி தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், “தாமிரபரணி ஆறு, கருமேனியாறு, நம்பியாறு எம்.எல்.தேரி வெள்ளநீர் கால்வாய் திட்டதுக்கு இந்த ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டதற்கு அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். இந்த திட்டத்தில் பணிபுரிவதற்காக நியமிக்கப்பட்ட 53 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லையை அடுத்த கொண்டாநகரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. அந்த ரேஷன் கடையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். எங்கள் ஊரில் அதிக அளவு மக்கள் தொகை இருப்பதால் பகுதி நேர புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் அதே கிராம மக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட இன்னொரு மனுவில், “எங்கள் ஊரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த 10 பேருக்கு மட்டும் வேலை கொடுக்கிறார்கள். மீதம் உள்ளவர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், “குடிநீர்தேக்க தொட்டி இயக்குனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எங்களுக்கு ஊதியக்குழுவின் புதிய சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

மூலைக்கரைப்பட்டி அருகே சோமநாதபேரியை சேர்ந்த பெண்கள், காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரை சந்தித்து ஊர் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், “எங்கள் ஊரில் குடிநீர் சரியாக கிடைக்கவில்லை இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் ஊருக்கு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

நாங்குநேரி அருகே இளைய நேரியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய கம்பூனிஸ்டு கட்சி யின் கடையநல்லூர் வட்டார செயலாளர் முத்துசாமி தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “ஆய்க்குடி யில் இருந்து செங்கோட்டை செல்லும் வழியில் ஒரு ரப்பர் தொழிற்சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து வெளி யேறும் புகை சுற்றுச்சுழலை பாதிக்கிறது. இதனால் அந்த ரப்பர் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்“ என்று கூறப்பட்டுள் ளது.

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ஆறு முகம் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேல்முரு கன், மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம பஞ்சாயத்து துப்புரவு தொழி லாளர்களுக்கு அரசாணைப் படி சம்பளம் வழங்க வேண் டும், ஓய்வு பெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை தாமதம் இல்லா மல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தனர்.

நெல்லை மாவட்டத்தில் கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், “தமிழக அரசால் 19-2-2016 அன்று, வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் என்ற ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) உவரியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் விதிமுறைகளை பின்பற்றாமல் வெளியிடப்பட்டு உள்ளது. வரைபடங்களை வைத்து அதிகாரிகள் கருத்து கேட்க முடிவு செய்து இருக்கிறார்கள். எனவே இந்த கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story