மரத்தில் லாரி மோதியது; வியாபாரி உள்பட 2 பேர் காயம்
இட்டமொழி அருகே மரத்தில் லாரி மோதிய விபத்தில் நெல் வியாபாரி உள்பட 2 பேர் காயமடைந்தனர்.
இட்டமொழி,
நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே பெரும்பனையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 50), நெல் வியாபாரி.இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மினிலாரியில் விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல் மூடைகளை பாவூர்சத்திரத்தில் இறக்கிவிட்டு லாரியில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். லாரியை இட்டமொழி அருகே உள்ள மனகாவலபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் (40) ஓட்டினார்.
லாரி, இட்டமொழி அருகே துவரம்பாடு பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையோரம் நின்ற மரத்தில் பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் அந்த மரம் வேரோடு சாய்ந்தது. சாய்ந்த மரத்துடன் லாரி சிறிது தூரம் சென்று நின்றது. இதில் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. லாரியில் இருந்த ஜெயச்சந்திரன், சாந்தகுமார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால்அவர்களால் முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story