சீட்டு நடத்தி பணம் மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் புகார் மனு
கொடுமுடி அருகே உள்ள வெற்றிக்கோனார்பாளையத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி மனோன்மணி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
ஈரோடு,
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு தனியார் சீட்டு நிறுவனம் வெள்ளகோவிலில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் நான் சீட்டு போட்டு, கடந்த 2015–ம் ஆண்டு முதல் பணம் செலுத்தி வந்தேன். இதுவரை ரூ.54 ஆயிரத்து 950 கட்டி உள்ளேன். சீட்டு முடிந்துவிட்டதால் பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு இன்னும் ஒரு வாரத்தில் பணத்தை திருப்பி தருவதாக கூறினார்கள். ஆனால் தற்போது வெள்ளகோவிலில் உள்ள அலுவலகத்தை காலி செய்து விட்டனர். இதனால் என்னுடைய பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story