வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் காங்கிரசார் உண்ணாவிரதம்
வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை பாதிக்கும் வகையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த திருத்தங்களை திரும்ப பெறக்கோரி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி திருச்சியில் நேற்று காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர். திருச்சி ஜங்ஷன் ராக்கின்ஸ் சாலை பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் விக்னேஷ் ஓட்டல் அருகில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், வடக்கு மாவட்ட தலைவர் கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில துணை தலைவர் சுப.சோமு, திருச்சி மாநகராட்சி முன்னாள் பொறுப்பு மேயர் எமிலி ரிச்சர்டு, முன்னாள் மேயர் சுஜாதா, பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் விச்சு, மகளிர் அணி மாநில செயலாளர் ஜெகதீஸ்வரி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜி.எம்.ஜி.மகேந்திரன், அருண், எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாவட்ட தலைவர் ஜோதி, கோட்ட தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், ஒதுக்குப்புறமான இடத்தில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்கியதாக கூறி திருச்சி மாநகர போலீசாரை கண்டித்தும் பேசினார்கள்.

Related Tags :
Next Story