காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலந்தூர்,
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் வெயிலை பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story