இந்திராணி முகர்ஜிக்கு அதிகளவு மருந்துகள் கிடைத்தது எப்படி?


இந்திராணி முகர்ஜிக்கு அதிகளவு மருந்துகள் கிடைத்தது எப்படி?
x
தினத்தந்தி 10 April 2018 4:12 AM IST (Updated: 10 April 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

பைகுல்லா சிறையில் இந்திராணி முகர்ஜிக்கு அதிகளவு மருந்துகள் கிடைத்தது பற்றி விசாரிக்க கூடுதல் சிறைத்துறை ஐ.ஜி. பூஷண் குமார் உத்தரவிட்டுள்ளார்.

மும்பை,

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, கடந்த வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவால் மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தபோது அவர் அளவுக்கு அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்தது.

சிறையில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்களுக்கு அந்தந்த வேளைக்கு சாப்பிட வேண்டிய மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படும். மேலும் மொத்தமாக மருந்துகளை சேமித்து வைப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தநிலையில் இந்திராணி முகர்ஜிக்கு மட்டும் எவ்வாறு அதிகளவில் மருந்துகள் கிடைத்தது என்பது குறித்து கேள்விகள் எழுந்தன.

இதையடுத்து கூடுதல் சிறைத்துறை ஐ.ஜி. பூஷண் குமார், இந்திராணி முகர்ஜிக்கு மருந்துகள் கிடைத்தது பற்றி விரிவான விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story