போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை சூறையாடிய பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது
அகமத்நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை சூறையாடிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.
அகமத்நகர்,
அகமத்நகர் கேட்காவ் பகுதியை சேர்ந்த சிவசேனா பிரமுகர்கள் சஞ்சய் கோட்கர்(வயது35) வசந்த் துபே(40) ஆகியோரை மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
அகமத்நகர் பகுதியில் நடைபெற்ற மாநகராட்சி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஷால் கோட்கருக்கு எதிராக சஞ்சய் கோட்கர் செயல்பட்ட தாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என அவரது மகன் சங்ராம் கோட்கர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. சங்ராம் ஜக்தப் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து சங்ராம் ஜக்தப் எம்.எல்.ஏ.விடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவரது உறவினர்களான பா.ஜனதா எம்.எல்.ஏ. சிவாஜி கர்டிலே மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. அருண் ஜக்தப் ஆகியோர் சங்ராம் ஜக்தப்பின் ஆதரவாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் அலுவலகத்துக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த சங்ராம் ஜக்தப்பை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கோஷம் போட்டனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அங்கு பணியில் இருந்த போலீசாரை தாக்கியதோடு சூப்பிரண்டு அலுவலகத்தை யும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்து 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பா.ஜனதா எம்.எல்.ஏ. சிவாஜி கர்டிலே உள்பட 23 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறை வாக உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.சி. அருண் ஜக்தப் உள்பட பலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story