பெஸ்ட் பஸ் கட்டண உயர்வு நாளை மறுநாள் முதல் அமல்


பெஸ்ட் பஸ் கட்டண உயர்வு நாளை மறுநாள் முதல் அமல்
x
தினத்தந்தி 10 April 2018 4:31 AM IST (Updated: 10 April 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

பெஸ்ட் பஸ் கட்டண உயர்வு நாளை மறுநாள் முதல் அமல்படுத்தப்படும் என பெஸ்ட் குழும அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மும்பை,

மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பெஸ்ட் குழுமம் 500 வழித்தடங்களில் பஸ் சேவைகளை இயக்கி வருகிறது. மின்சார ரெயில் சேவைக்கு அடுத்தபடியாக, பெஸ்ட் பஸ் சேவைகளை சுமார் 30 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பெஸ்ட் பஸ்கள் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், நஷ்டத்தை சமாளிப்பதற்கு பஸ் கட்டணத்தை உயர்த்த பெஸ்ட் குழுமம் முடிவு செய்தது. பெஸ்ட் குழுமத்தின் இந்த முடிவுக்கு மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. இதன்படி பெஸ்ட் பஸ் கட்டணம் தற்போது அதிகபட்சமாக 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் முதல் 2 கி.மீட்டர் பயணிப்பதற்கான அடிப்படை கட்டணம் ரூ.8 மற்றும் 4 கி.மீ. பயணிப்பதற்கான ரூ.10 கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன் பின்னர் பயணிக்கும் தூரத் தினை பொறுத்து கட்டணத்தில் ரூ.1 முதல் ரூ.12 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 5-ம் வகுப்பு வரையி லான பள்ளி மாணவர்களுக் கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.150-ல் இருந்து 200 ரூபாயாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாஸ் கட்டணம் ரூ.200-ல் இருந்து 250 ரூபாயாகவும், ஜூனியர் கல்லூரி மாணவர்களுக்கான பாஸ் கட்டணம் ரூ.300-ல் இருந்து 350 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தினசரி பஸ் பாஸ் ரூ.70-ல் இருந்து ரூ.90 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஏ.சி. பஸ் கட்டணமும் ரூ.20 வரை உயர்கிறது. பஸ் கட்டண உயர்வுக்கு மாநகராட்சி ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், மும்பை பெருநகர போக்குவரத்து ஆணையம் நாளை (புதன்ழமை) ஒப்புதல் அளிக்கிறது. அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் உடனடியாக பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என பெஸ்ட் குழும அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story