தனியார் வேலைவாய்ப்புகளையும் ஒருங்கிணைக்கும் அரசு இணையம்!
வேலைவாய்ப்பு இணையதளங்கள் பெருகி விட்டன. உலகளாவிய தனியார் இலவச வேலைவாய்ப்பு தகவல் தளங்களும், காசு வசூலித்து தகவல் வழங்கும் தனியார் தளங்களும் பல உள்ளன.
வேலை தேடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வேலை பெற்றுத் தருவதாக மோசடிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன.
மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து வேலை தேடுபவர்களை காக்கவும், வேலை எங்கு கிடைக்கும் என்ற தகவல்களை ஓரிடத்தில் அறிந்து கொள்ளவும் மத்திய அரசு தனி இணையதளத்தை நடத்தி வருவது பலரும் அறியாத தகவல். இந்த இணையத்தில் தனியார் நிறுவனங்களும் பதிவு செய்து வேலை தேடுனர்களை தேர்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதள முகவரி https://www.ncs.gov.in என்பதுதான். இந்த இணையத்தை மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பதிவு செய்யலாம்.
வேலை தேடுவோரையும், வேலைதரும் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்த இணையதளம் செயல்படுகிறது. இந்தியா முழுக்க அரசு அல்லது தனியார் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்கள், வேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்த தகவல்களையும் இதில் பார்க்கலாம்.
வேலை தேடுவோர் இந்த இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்ய முதலில், புதிய பதிவர் (நியூ யூசர்) என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வேலை தேடுபவர் என்ற பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். இப்போது திறக்கும் படிவத்தில் பெயர், முகவரி கல்வித்தகுதி போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் அல்லது அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அடையாள அட்டையின் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கான ‘லாக் இன் ஐ.டி., பாஸ்வேர்டு’ ஆகியவற்றையும் நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்த முறை உள்நுழைய வேண்டுமானால் உங்கள் கணக்கு முகவரி, பாஸ்வேர்டு பயன் படுத்தியே மீண்டும் இந்த இணையதளத்துக்குள் செல்ல முடியும். உங்களுடைய தகுதிக்கு ஏற்ற பணிகள், இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டால், உடனே அந்த தகவல் உங்களுக்கு மின்னஞ்சலில் வந்துவிடும்.
வேலை தேடுவோர் தவிர, வேலை கொடுக்கும் நிறுவனங்களும் இதில் பதிவு செய்யலாம். ஏராளமான நிறுவனங்கள் இதில் பதிவு செய்து தகுதியானவர்களை பணியமர்த்தி வருகின்றன. பயிற்சி மையங்கள் நடத்துபவர்களும், வேலைவாய்ப்பு ஆலோசனைகள் வழங் குவோரும், தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் இதில் பதிவு செய்ய முடியும். தொழில்நிறுவனங்கள் பதிவு செய்யும் போது நிறுவனத்தின் பெயர் லைசென்ஸ், மின்னஞ்சல் முகவரி, நிறுவனத்தின் இணையதளம் போன்ற தகவல்கள் கேட்கப்படுகிறது.
அவர்கள் மட்டுமல்லாது தனிநபர் சேவை பற்றியும் இதில் பதிவு செய்யலாம். அதாவது நீங்கள் ஓர் எலக்ட்ரீசியன் என்றால், உங்கள் சேவை பற்றி முகவரி, தொலைபேசி எண்களுடன் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் நிறுவன பணிவாய்ப்பு மட்டுமின்றி, உங்கள் தொழில் மற்றும் சுய வேலைவாய்ப்பை பெருக்கிக் கொள்ளலாம்.
நீங்கள் தேடும் தகுதியுள்ள பணி பற்றி உங்களுக்கும், நிறுவனம் தேடும் தகுதியான நபர்கள் பற்றி அவர்களுக்கும் விவரங்கள் பரிமாறப்படும். இப்படி ஒவ்வொரு தேவையும் பதிவு செய்யப்பட்டதும் தானியங்கி முறையில் உடனே தகவல் பரிமாற்றம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதி இல்லாதவர்களும் இதில் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 811 தலைமை தபால் நிலையங்களில் இதற்கான பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடுத்த முறை கூடுதல் தகவல்களை பதிய வேண்டுமானால் அதற்கு 5 ரூபாய் கட்டணம் பெறுகிறார்கள். தமிழகத்தில் 94 தலைமைத் தபால் நிலையங்களில் இந்த வசதி உள்ளது.
இந்தத் தளம் பற்றிய தகவல்கள் பலர் அறியாமல் இருப்பதாலும், இணையம் இல்லாவிட்டால் தபால் நிலையங்களில் பதிவு செய்ய முடியும் என்ற தகவல் தெரியாததாலும் இந்த சேவையை நிறைய பேர் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். இருந்தாலும் தினமும் இந்த இணையதளத்தில் இந்தியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி தகவல்கள் ‘அப்டேட்’ செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்தும், வேலைவாய்ப்பு பெற்றும் வருகிறார்கள். நீங்களும் வேலை தேடுவோர் என்றால் இந்த அரசு இணையதளத்தையும் பயன்படுத்தி வேலை பெறலாமே!

Related Tags :
Next Story