பன்னாட்டு மொழி பட்டப்படிப்புகள் வழங்கும் பிரகாசமான வாய்ப்புகள்
தாராள பொருளாதாரமயமாக்கலால் பன்னாட்டு மற்றும் சர்வதேச தொழில் நிறுவனங்கள் இன்று உலகம் முழுவதும் கால் பதித்துள்ளன. அவற்றின் கிளைகள் இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் செயல்படுகின்றன.
தகவல் தொடர்பு இப்படி செயல்படும் நிறுவனங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இதற்கு நல்ல மொழிறிவு அவசியமாகிறது. எனவே உலகத் தொடர்பு மொழியான ஆங்கில அறிவு மட்டுமல்லாது, பிற பன்னாட்டு மொழியறிவையும் வளர்ப்பது சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருகிறது. இதற்காக பிறநாட்டு மொழிப்பாடங்களை பட்டப்படிப்பாக, பட்ட மேற்படிப்பாக படிப்பது இதுபோன்ற நிறுவனங்களில் அதிகமான வேலைவாய்ப்புகளையும், நல்ல வருவாயையும் ஈட்டித் தருகிறது. பிறநாட்டு மொழி படிப்புகள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி அறிவோம்....
என்றுமே வணிக உலகில் தகவல் தொடர்புக்கு பன்மொழித்திறன் முக்கியமானதாக இருந்து வருகிறது. இன்று வணிகமும், தொழில்துறையும் உலகளாவிய அளவில் நடைபெறுவதால் பன்மொழியறிவுத் திறன் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களில் மேலதிகாரிகள் மற்றும் போட்டியாளர்கள், வணிக நண்பர்களுடன் தகவல் தொடர்பு கொள்ள அந்த நாட்டு மொழியறிவு அவசியமாகிறது. அதுவும் ஆங்கிலத்தில் அல்லாமல் அந்த நாட்டு மொழியில் தொடர்பு கொண்டு பேசும்போது புரிதல் திறனும், பணிகளும் இன்னும் சுலபமாகிறது. தகவல்தொடர்பும், நட்புறவும் இணக்கமாக நடக்க வாய்ப்பாக அமைகிறது.
கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் வணிக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள மொழி ஒரு தடையாக அமையாதவாறு பார்த்துக் கொள்வது வேலை தேடுனர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
அயல்நாட்டு மொழிகளில் பட்டப்படிப்புகளும், முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளாகளும் இருக்கின்றன குறிப்பாக பிரெஞ்சு, ஜெர்மன், ரஷியன், சைனீஸ், ஜப்பான், ஸ்பானிஸ், கொரியன், போர்ச்சுகீஸ் போன்ற பன்னாட்டு மொழிகள் சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்புகளை தேர்வு செய்யலாம். நாடு முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் அயல்நாட்டு மொழியியல் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன. வெளியுறவு தூதரகங்கள், அந்தந்த மொழி சார்ந்த கல்வி நிறுவனங்கள், இந்தியா - அயல்நாட்டு கூட்டுறவு கல்வி நிறுவனங்களும் மொழிப்படிப்புகளை வழங்குகின்றன. இணையம் வழியாகவும் சில மொழி படிப்புகளை படிக்க முடியும்.
படிப்புக்கான கால அளவும், கற்பிக்கபடும் விதமும் கல்வி மையங்கள் தோறும் மாறுபடும். முன்னணி கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதே நன்மை பயக்கும். சில கல்வி நிறுவனங்கள் ஆரம்ப கட்ட சோதனை தேர்வுகள் மூலம் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.
பிற நாட்டு மொழிப் படிப்புகள் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தக்கூடியவை. வருவாய் நிறைந்த பணிவாய்ப்பை பெற உதவும். பிறநாட்டு மொழிகளை நன்றாக கற்று, சரளமாக பேசுவது வேலைவாய்ப்பை பெற்றுத் தருவது மட்டுமல்லாமல், தகவல் தொடர்பு மொழி நிபுணர், உரை பெயர்ப்பாளர், மொழி பெயர்ப்பாளர் போன்ற சிறப்பு பணிகளை பெறவும் கைகொடுக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமல்லாது உள்நாட்டிலேயே சுற்றுலாத்துறை, பொது தகவல் தொடர்பு துறைகள், வெளியுறவுத்துறை பணிகள், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகத்துறை, பாதுகாப்பு படை, உளவு அமைப்புகள், அயல்நாட்டு தூதரகங்கள், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் போன்றவற்றிலும் பணிவாய்ப்புகளை பெற்றுத் தரும். கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், பேராசிரியர் பணிவாய்ப்புகளையும் பெறலாம். மென்பொருள் நிறுவனங்களிலும் வாய்ப்புகள் உள்ளன. வளாகத் நேர்முகத் தேர்வு மூலமும் பல நிறுவனங்கள் பணிக்கு தேர்வு செய்கின்றன.

Related Tags :
Next Story