திருப்பூரில், காதலன் வீட்டு முன்பு கர்ப்பிணி தர்ணா போராட்டம்
4 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த பின்னர் ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு கர்ப்பிணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த தெய்வேந்திரன்-கவிதா தம்பதியின் மகள் சுப்ரபாதம் (வயது 29). பெற்றோர் இறந்து விட்டதால் சுப்ரபாதம் சிறு வயதிலேயே திருப்பூர் வந்து தங்கி பி.காம் வரை படித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த தினேஷ் (30) என்பவருக்கும் சுப்ரபாதத்துக்கும் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு லக்சன் (13), ரீபூதமன்(6) என்ற 2 மகன்கள் உள்ளனர். தினேசுக்கும், சுப்ரபாதத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2011-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனால் மூத்தமகன் லக்சன் தந்தையுடனும், இளைய மகன் ரீபூதமன் தாயுடனும் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் மனோஜ்குமார் (29) என்பவருக்கும் சுப்ரபாதத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் வஞ்சிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சுப்ரபாதம் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் மனோஜ்குமாருக்கும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் கடந்த 4-ந் தேதி திருமணம் நடைபெற இருந்ததாக தெரிகிறது. இந்த திருமணத்தின் அழைப்பிதழை முகநூலில் பார்த்த சுப்ரபாதம் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து மனோஜ்குமாரிடம் கேட்டார். ஆனால் அவர் அதற்கு சரியாக பதில் கூறாமல் திருமணத்தை சுப்ரபாதத்திடம் மறைக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சுப்ரபாதம் இது தொடர்பாக கடந்த மாதம் 25-ந் தேதி திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் மனோஜ்குமார் மற்றும் சுப்ரபாதத்தை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மனோஜ்குமார் கடந்த 4 ஆண்டுகளாக சுப்ரபாதத்துடன் வாழ்ந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனோஜ்குமாருக்கு கடந்த 4-ந் தேதி நடைபெற இருந்த திருமணம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த மனோஜ்குமார் சுப்ரபாதத்துடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார்.
இந்த நிலையில் சுப்ரபாதம் அவருடைய 6 வயது மகன் ரீபூதமனுடன் நேற்று காலை மனோஜ்குமாரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் காதலன் மனோஜ்குமாரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி வீட்டின் வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.நிறைமாத கர்ப்பிணியான சுப்ரபாதம் தனது மகனுடன் சுமார் 3 மணி நேரம் அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்ரபாதத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார் இது தொடர்பாக புகார் அளிக்கும்படி கூறினார்கள். அதன் பேரில் தன்னுடன் மனோஜ்குமாரை சேர்த்து வைக்கக்கோரி சுப்ரபாதம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Related Tags :
Next Story