தேர்தலில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் பயணத்தை தொடங்கினார், எடியூரப்பா
தேர்தலில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்ய வசதியாக எடியூரப்பா ஹெலிகாப்டரில் பயணத்தை தொடங்கினார்.
பெங்களூரு,

ஹெலிகாப்டர் பயணத்தை...
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நவ கர்நாடகத்தை உருவாக்கும் நோக்கத்தில் மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடந்த ஆண்டு (2017) நவம்பர் மாதம் 2-ந் தேதி பஸ் பயணத்தை தொடங்கினார். பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த பயணத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த பயணம் மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிக்கும் சென்றது. சுமார் 75 நாட்கள் இந்த பயணத்தை எடியூரப்பா மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி மாநாடுகள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவின் பேரில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் எடியூரப்பா ஹெலிகாப்டர் பயணத்தை நேற்று தொடங்கினார். இதற்காக அவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை அவர் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்வார். அந்த ஹெலிகாப்டரில் 6 பேர் வரை அமர முடியும்.
விவசாயிகளுடன் கலந்துரையாடல்
அவர் நேற்று கொப்பல் மாவட்டம் கங்காவதிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கு விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் கஷ்டங்களை கேட்டு அறிந்தார். நெல் வயல்களுக்கு சென்று தண்ணீர் இன்றி கருகிய நிலையில் இருந்த நெற்பயிர்களை பார்த்தார். மாநில அரசு மீது அவர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த காங்கிரஸ் அரசு செத்துவிட்டதாக குறை கூறினார். அதைத்தொடர்ந்து கதக் மாவட்டத்திற்கு வந்தார். வருகை தந்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

Related Tags :
Next Story