காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் 40 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டு புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி,
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று காலை கோர்ட்டு வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வக்கீல் துரை தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகள் மற்றும் கர்நாடகா அரசை கண்டித்தும் ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பொள்ளாச்சியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் துணை தலைவர் மருதராஜ், செயலாளர் கணேஷ், துணை செயலாளர் உதயகுமார் உள்பட மூத்த வக்கீல்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் வக்கீல்கள் ஊர்வலமாக வந்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரெயில் நிலையத்துக்குள் சென்று மதுரையில் இருந்து கோவை நோக்கி செல்லும் பயணிகள் ரெயிலை மறித்தனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
இதையடுத்து போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் 40 பேரை கைது செய்தனர். கைதானவர்களை லாரி உரிமையாளர்கள் சங்க திருமண மண்டபத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
மறியல்போராட்டத்தை யொட்டி பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு காரணமாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

Related Tags :
Next Story