சத்தாராவில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து 18 தொழிலாளர்கள் பரிதாப சாவு 15 பேர் படுகாயம்
சத்தாராவில் அதிகாலையில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
புனே,

லாரி கவிழ்ந்தது
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் இருந்து கட்டுமான தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மராட்டிய மாநிலம் புனே நோக்கி புறப்பட்டது. அந்த லாரியில் 30-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் இருந்தனர். மேலும் அதிக எடை கொண்ட இரும்பு மற்றும் கூர்மையான பொருட்களும் லாரியில் இருந்தன.
இந்தநிலையில் அந்த லாரி சத்தாரா மாவட்டம் வழியாக மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, தொழிலாளர்கள் அனைவரும் உட்கார்ந்தபடியே அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த லாரி சத்தாரா கண்டாலா பகுதியில் வேகமாக வந்தபோது, அங்குள்ள ‘எஸ்' வளைவில் டிரைவர் லாரியை திருப்ப முயன்றார். இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் அனைவரும் உள்ளே சிக்கி கொண்டனர்.
உடல் நசுங்கினர்
லாரியில் இருந்த இரும்பு பொருட்கள் அவர்கள் மீது விழுந்து அமுக்கின. இதில், உடல் நசுங்கி தொழிலாளர்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்து உதவிகேட்டு அபயகுரல் எழுப்பினார்கள். அதிகாலை நேரம் என்பதால் விபத்து நடந்தது உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. இதனால் காயம் அடைந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் லாரி கவிழ்ந்து கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
18 பேர் பிணமாக மீட்பு
மேலும் ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தன. கவிழ்ந்த லாரிக்குள் சிக்கியிருந்த 18 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 15 பேர் படுகாயங்களுடன் துடித்து கொண்டிருந்தனர். அவர்களில் பலரது தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தன. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சத்தாரா அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்றவர்களும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணை
விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்தில் பலியான அனைவரும் கர்நாடக மாநிலம் பிஜாப்பூரை சேர்ந்தவர்கள் ஆவர்.
விசாரணையில் பலியானவர்களின் பெயர்கள்- மாதவி (வயது45), சங்கர் (55), சந்தோஷ் (32), மங்கள்பாய் (42), கிருஷ்ணா சோனு (60), கிரண் விட்டல் (15), தேவாபாய் மோகன் (27), சங்கீதா கிரண் (26), தேவானந்த் நாராயண் (35), பிரியங்கா கல்லு (18), கல்லுபாய் விட்டல் (35), விட்டல் கிரு (40), அர்ஜூன் ரமேஷ் (30), ஸ்ரீகாந்த் பாசு (38), சீனுபாசு (30), மெஹபூப் (55), மஜித் மெகபூப் (25), ரன்வீர் கிரண் என்பது தெரியவந்தது.
இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். லாரி டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் 18 தொழிலாளர்கள் பலியான இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story