செல்போனுக்காக கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலம் கட்டிட மேஸ்திரி கைது
ஆம்பூரில் சிறுவன் கிணற்றில் பிணமாக கிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக செல்போனுக்காக கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் கிஷோர்வாசன் (வயது 8). ஆம்பூர் உமர்ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 5-ந் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினான். பின்னர் அந்த பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றவன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. மறுநாள் 6-ந் தேதி சங்கர் தனது மகனை காணவில்லை என ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தியேட்டர் பின்பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு சிறுவன் இறந்து கிடப்பது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த சிறுவன் கிஷோர்வாசன் என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அப்பகுதியை சேர்ந்த ராஜா மகன் விக்னேஷ் (20) என்பவர், சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அழகாபுரியின் பின்பகுதியில் இளைஞர்கள் கபடி மற்றும் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அவர்களின் செல்போன்களை அப்பகுதி சிறுவர்கள் வாங்கி வைத்து கொள்வர். அதன்படி, கடந்த 5-ந் தேதி மாலையில் அப்பகுதியில் இளைஞர்கள் கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவன் கிஷோர்வாசன் அங்கு சென்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது அங்கு விளையாடிய நவீன் என்பவரது செல்போனை கிஷோர்வாசன் வாங்கி வைத்திருந்தான்.
இதனையடுத்து கிஷோர்வாசன் அந்த செல்போனுடன் வீட்டுக்கு சென்றதும், அவனது தாயார் செல்போனை கொடுத்துவிட்டு வரும்படி கூறியுள்ளார். இதனால் செல்போனை கொடுப்பதற்காக கிஷோர்வாசன் அங்கு சென்றுள்ளான். அங்கு நவீன் இல்லை. விக்னேஷ் மட்டும் அங்கு இருந்ததும், அவர், செல்போனை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் சிறுவன், நவீன் அண்ணனுடைய செல்போன் என்றும், அவரிடம் தான் கொடுக்க வேண்டும் என்றும் கூறி ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது.
அப்போது விக்னேஷ் சிறுவனை விரட்டி சென்று கழுத்தை பிடித்து நெரித்து செல்போனை பிடிங்கிக்கொண்டு, கொலை செய்து அங்குள்ள பாழடைந்த கிணற்றில் தள்ளிவிட்டு சென்றது தெரியவந்தது. மேலும் சிறுவனிடம் இருந்து பறித்த செல்போனை ஒருவரிடம் வீட்டு வாடகை கொடுக்க ரூ.2 ஆயிரம் வேண்டும் என சொல்லி விற்று இருப்பதும் தெரியவந்தது.
இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் விக்னேஷை கைது செய்து, மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான விக்னேஷ் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.2 ஆயிரத்துக்காக சிறுவனிடம் இருந்த செல்போனை பறித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பாழடைந்த கிணற்றில் வீசிச்சென்ற சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story