திருப்பாற்கடல் பெருமாள் கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம்


திருப்பாற்கடல் பெருமாள் கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 11 April 2018 6:10 AM IST (Updated: 11 April 2018 6:10 AM IST)
t-max-icont-min-icon

திருப்பாற்கடல் வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

பனப்பாக்கம்,

காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 107-வது திவ்ய தேசமாக விளங்குகிறது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தால் சித்ரகுப்தன் எழுதி வைத்த நம்முடைய பாவங்கள் விமோசனம் ஆகின்றன என்பது ஐதீகம்.

இங்கு சிவலிங்கத்தின் மீது வெங்கடேச பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருவது விசேஷமாகும். அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் கோவிலாக இக்கோவில் அமைந்துள்ளது. அதோடு வைணவத்தையும், சைவத்தையும் ஒன்றிணைக்கும் திருத்தலமாக இக்கோவில் விளங்குகிறது.

இத்தகைய பிரசித்தி பெற்ற கோவிலில் நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் துளசிதீர்த்தம், மஞ்சள், குங்குமம், பூ மற்றும் மாலை, பழங்கள் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, பிரேமலதா விஜயகாந்த் சர்க்கரை பொங்கல் வழங்கினார். அதைத் தொடர்ந்து கோவிலை சுற்றி வந்தார். பின்னர் கோவில் அருகேயுள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவிலும் சிறப்பு அர்ச்சனை செய்து சாமியை வழிபட்டார்.

அப்போது தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மனைவி பூரணஜோதி, தே.மு.தி.க. வேலூர் மாவட்ட செயலாளர் பூட்டுதாக்கு நித்யா, மாவட்ட அவைத்தலைவர் பாலாஜி, பொருளாளர் சரவணன், துணை செயலாளர் அத்திப்பட்டு பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story