நாளை முதல் வருகிற 30-ந் தேதி வரை திருச்சி-மயிலாடுதுறை ரெயில் 19 நாட்களுக்கு ரத்து


நாளை முதல் வருகிற 30-ந் தேதி வரை திருச்சி-மயிலாடுதுறை ரெயில் 19 நாட்களுக்கு ரத்து
x
தினத்தந்தி 11 April 2018 6:27 AM IST (Updated: 11 April 2018 6:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-மயிலாடுதுறை ரெயில் நாளை(வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை 19 நாட்களுக்கு ரத்து செய்யப் படுவதாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி,

இது தொடர்பாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி கோட்டத்தில் ரெயில்வே என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை 19 நாட்கள் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வண்டி எண் 76824, 76827 திருச்சி-தஞ்சை-திருச்சி பயணிகள் ரெயில் வருகிற 14, 21, 28(சனிக்கிழமைகள்) ரத்து செய்யப்படுகிறது. இதே போல் வண்டி எண் 16233, 16234 மயிலாடுதுறை-திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் நாளை முதல் 30-ந்தேதி வரை 19 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.

நாகை-காரைக்கால்

வண்டி எண் 56824 திருச்சி-மயிலாடுதுறை ரெயில் நாளை முதல் 30-ந்தேதி வரை 19 நாட்கள் கும்பகோணம்-மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண் 76812 தஞ்சை- காரைக்கால் பயணிகள் ரெயில் நாகை- காரைக்கால் இடையே வருகிற 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 11 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகின்றன.

வண்டி எண் 76813 காரைக்கால்-வேளாங் கண்ணி பயணிகள் ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 11 நாட்கள் காரைக்கால்-நாகை இடையே ரத்து செய்யப்படுகிறது.

நிறுத்தி வைக்கப்படும்

வண்டி எண் 56822 திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் நாளை முதல் 30-ந் தேதி வரை 19 நாட்கள் சோளகம்பட்டி ரெயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப் படும்.

வண்டி எண் 16188 எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 11 நாட்கள் நாகையில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

வண்டி எண் 56714 திருச்சி- காரைக்கால் பயணிகள் ரெயில் 20-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை 11 நாட்கள் நாகை ரெயில் நிலையத்தில் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story