வெளிமாநில துணைவேந்தர்களை திரும்ப பெறக்கோரி கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
வெளிமாநிலத்தை சேர்ந்த துணைவேந்தர்களை திரும்ப பெறக்கோரி அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி முன்பு நேற்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொருளாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், இசை பல்கலைக்கழகம், சட்டப்பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் வெளி மாநிலங்களை சேர்ந்த பேராசிரியர்களை துணைவேந்தர்களாக நியமித்து இருப்பதை கண்டிப்பது, இந்த நியமனங்கள் தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த மூத்த பேராசிரியர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், கல்வியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால், வெளி மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 இடங்களில்...
இதேபோல் திருவெறும்பூரை அடுத்துள்ள துவாக்குடி அரசு கலை கல்லூரி நுழைவாயில் முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மண்டல செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திருச்சி மண்டல தலைவர் சார்லஸ் செல்வராஜ் தலைமை தாங்கினார். முசிறி கிளை தலைவர் செந்தில்குமரன், செயலாளர் மருதைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட கரூர், அரியலூர், புதுக்கோட்டை, வேப்பந்தட்டை அரசு கல்லூரிகள் உள்பட மொத்தம் 10 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக மண்டல செயலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story