மத்திய அரசை கண்டித்து அரசு கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மன்னார்குடியில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுந்தரக்கோட்டை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள், மாணவர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளை தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரவி, செயலாளர் முருகானந்தம், மண்டல பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், தமிழக பல்கலைகழகங்களில் துணை வேந்தர்களாக தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story