காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை இனி அலட்சியப்படுத்த முடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கரூர்,
காவிரி விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு சாதகமான கருத்தை கூறியிருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கும் தமிழக மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தி.மு.க.வினர் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் அ.தி.மு.க.வின் வெற்றியை மறைப்பதற்காக, கொச்சைப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது என நான் கருதுகிறேன். அவர்கள் (தி.மு.க.) செய்ய வேண்டியதை செய்ய தவறியதாலும், அதை மறைத்து மக்களை திசைதிருப்புவதற்காகவும் மு.க.ஸ்டாலின் நடைபயணம் சென்று கொண்டிருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை இனி மத்திய அரசு அலட்சியப்படுத்த முடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நம்பிக்கை உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நமக்கு சாதகமாக உள்ளது. தமிழக மக்களை நாங்கள் (அ.தி.மு.க.) விட்டுவிட மாட்டோம்.
ராணுவ வலிமையை மேம்படுத்த பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) தமிழகம் வருகிறார். அப்போது காவிரி விவகாரத்துடன் தொடர்புபடுத்தி அவர் வருவதை நாம் எதிர்க்கக்கூடாது என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் பிரதமர் மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பது குறித்து தம்பிதுரையிடம் நிருபர்கள் கேட்டதற்கு, பிரதமர் வரும் போது அவரிடமே இதுகுறித்து கேட்டுக்கொள்ளுங்கள் எனக்கூறினார்.
அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.

Related Tags :
Next Story