ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 29 மாத நிலுவை தொகையை உடனே வழங்க கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர் நல அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும், 29 மாத கால பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்கவேண்டும், காப்பீடு திட்டத்தை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்பாக பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்காக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் திரண்டு வந்தனர். அப்போது அவர்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி கேட்டை இழுத்து மூடினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்றால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார்கள். இதனை தொடர்ந்து கேட் திறக்கப்பட்டு தொழிலாளர்கள் அலுவலக வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்ட முடிவில் அதிகாரிகளிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story