தடுப்புச்சுவர் மீது கார் மோதி விபத்து தந்தை-மகள் பலி; சிறுமிகள் உள்பட 6 பேர் படுகாயம்
தடுப்புச்சுவர் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியாயினர். மேலும் சிறுமிகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரவக்குறிச்சி,
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முகமது சந்திரன்தொடி(வயது 60), இவருடைய மனைவி சுகாரா(46), இவர்களது மகன்கள் சினான்(26), ஆசிக்(21), மகள் மும்தாஜ்(35), இவரது மகள்கள் சிமிலாநர்கீஸ் (14), சஹானா ஷெரின்(9), ஆயிஷா சின்ஹா(4). இவர்கள் 8 பேரும் ஒரு காரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடிக்கு சென்றுவிட்டு, மீண்டும் கேரளாவை நோக்கி கரூர் வழியாக சென்று கொண்டு இருந்தனர்.
காரை சினான் ஓட்டி சென்றார். நேற்று காலை 10 மணி அளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஜங்கால்பட்டி பிரிவு அருகே கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி சாலையில் உருண்டது.
இதில் படுகாயம் அடைந்த முகமது சந்திரன்தொடி, மும்தாஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த சிறுமிகள் உள்பட 6 பேரையும் அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முகமது சந்திரன்தொடி, மும்தாஜ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் கரூர்- திண்டுக்கல் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story