காவிரி உரிமை மீட்பு 2-வது குழு பயணம் தொடக்கம் தி.மு.க., தோழமை கட்சியினர் பங்கேற்பு
காவிரி உரிமை மீட்பு 2-வது குழு பயணத்தை அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் இருந்து தி.மு.க., தோழமை கட்சியினர் தொடங்கினர்.
திருமானூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தொடங்கி உள்ள காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 2-ம் குழு பயணம் அரியலூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை கீழப்பழுவூரில் இருந்து பயணத்தை தொடங்கிய குழுவினர், மொழிப்போர் தியாகி சின்னசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கடைவீதிகளின் வழியாக செல்லியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தி.மு.க. துணை பொதுச்செயலாளர்கள் பெரியசாமி, வி.பி.துரைசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளின் தமிழக விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூருக்கு...
அதைத்தொடர்ந்து, திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய நடைபயணம் முக்கிய வீதிகளின் வழியே ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன், திருமானூரில் உள்ள கொள்ளிடப்பாலம் வரை சென்றது. அப்போது, பஸ் நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், துணை செயலாளர்கள் தனபால், லதாபாலு, ஒன்றிய செயலாளர்கள் கென்னடி (கிழக்கு), அசோக சக்ரவர்த்தி (மேற்கு) மற்றும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளின் ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இக்குழுவினர் சென்றனர்.

Related Tags :
Next Story