கோடையை குதூகலமாய் கொண்டாட குளத்தில் படகு சவாரி விஜயகுமார் எம்.பி. இன்று தொடங்கி வைக்கிறார்
கோடையை குதூகலமாய் கொண்டாட நாகர்கோவில் அனந்தனார் குளத்தில் படகு சவாரி இன்று (புதன்கிழமை) தொடங்கப்படுகிறது. இதனை விஜயகுமார் எம்.பி.தொடங்கி வைக்கிறார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலாத்தலங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் படகு சவாரிக்கென தனியான தளம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. இது குமரி மாவட்ட மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் குறையாகவே இருந்து வந்தது. மேலும் தனியாக படகு குழாம் அமைய வேண்டும் என்பதும் மக்களின் நீண்டகால கோரிக்கையாகவும் இருந்து வந்தது. இதையறிந்த விஜயகுமார் எம்.பி. பயனற்ற நிலையில் இருந்த கோணம் அருகே உள்ள அனந்தனார் குளத்தில் படகு சவாரி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். அதன்தொடர்ச்சியாக குமரி மாவட்டத்துக்கு வருகை தந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அனந்தனார் குளத்தை பார்வையிட்டு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் படகு குழாம் அமைப்பதற்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் செலவில் அனந்தனார் குளம் பகுதி சமதளம் செய்யப்பட்டு படகுதளம், காத்திருப்புக்கூடம், டிக்கெட் வினியோக அறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் குளம் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. விஜயகுமார் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குளத்துக்கு வரக்கூடிய தார்தள சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே படகு சவாரிக்காக குற்றாலத்தில் இருந்து 6 படகுகள் வரவழைக்கப்பட்டு இருந்தன. மேலும் 5 படகுகள் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் 5 படகுகள் கொண்டுவரப்பட உள்ளது. படகு சவாரிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு படகு சவாரி தொடக்க விழா நடைபெற உள்ளது.
விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்குகிறார். விஜயகுமார் எம்.பி. படகு குழாமை திறந்து வைத்து, படகு சவாரியை தொடங்கி வைக்கிறார். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேதஅருள்சேகர், நகராட்சி ஆணையர் சரவணகுமார், சுற்றுலாத்துறை அதிகாரி நெல்சன் மற்றும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்தநிலையில் நேற்று படகு குழாமையும், அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகளையும் விஜயகுமார் எம்.பி. பார்வையிட்டார். இதில் குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய இணைத்தலைவர் சகாயம், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கனகராஜ், நகர இலக்கிய அணி செயலாளர் சதானந்தன், தொழிலதிபர்கள் காமராஜ், வெற்றிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோடை காலத்தில் இந்த படகு சவாரி தொடங்கப்படுவது விடுமுறையில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கோடையை குதூகலமாக்க கொண்டாட இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படகு சவாரிக்கு வரவேற்பும் அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகுமார் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். மேலும் ரூ.50 லட்சம் செலவில் உதயகிரி கோட்டையில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ளவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன். சாமிதோப்பில் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) விமான போக்குவரத்துறை அதிகாரிகள் வருகை தந்து ஆய்வு செய்ய இருக்கிறார்கள். கணபதிபுரத்தில் ரூ.2 கோடியில் கடற்கரை சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மணக்குடி காயலில் படகு சவாரி பணிகளுக்கு டெண்டர் விடும் நிலையில் உள்ளது. கணபதிபுரத்தில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் கபடி உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.
ரூ.140 கோடி செலவில் உலக்கை அருவி திட்டத்தை செயல்படுத்த திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோதையாறு வடிநீர் கோட்டத்துக்கு உட்பட்ட தடவையாறில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைத்து நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட முக்கடல் குடிநீர் அணைக்கு தண்ணீர் கொண்டுவர திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விஜயகுமார் எம்.பி. கூறினார்.

Related Tags :
Next Story