விஷம் தின்று பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 2 மாணவிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பெரம்பலூர் அருகே விஷம் தின்று பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த 2 மாணவிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு 44 மாணவிகள் தங்கி அதே பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், 9-ம் வகுப்பு மாணவிகளான பாண்டகப்பாடியை சேர்ந்த மணிமேகலை (வயது 14), ரஞ்சன்குடியை சேர்ந்த சினேகா (14) ஆகியோர் கடந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறைக்காக வீட்டுக்கு சென்றனர். வீட்டிற்கு செல்வதற்கு முன்பு மணிமேகலையும், சினேகாவும் தங்கள் பயன்படுத்திய சட்டை துணிகளை துவைத்து விடுதியில் உலர வைத்து விட்டு சென்றனர். பின்னர் 9-ந்தேதி விடுதிக்கு வந்தபோது தாங்கள் துவைத்து உலர வைத்திருந்த துணிகள் காணாமல் போய் இருந்தது.இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர்கள் விடுதி காப்பாளரிடம் விடுதியில் உலர வைத்த துணிகள் எப்படி காணாமல் போனது என கேட்டனர். இதனை தொடர்ந்து விடுதி காப்பாளர் மற்றும் விடுதி துப்புரவு உதவியாளர் ஆகியோர் மாணவிகளை அழைத்து விடுதியில் நடக்கும் அனைத்தையும் வீட்டிற்கு தெரியப்படுத்துவீர்களா என கூறி திட்டினர்.
இதனால் மனமுடைந்த மாணவிகள் மணிமேகலை, சினேகா ஆகியோர் நேற்று விடுதியிலிருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்றனர். அப்போது அந்த வழியில் உள்ள கடையில் எலி மருந்து (விஷம்) வாங்கி இருவரும் தின்றனர். பின்னர் பள்ளிக்கு சென்ற மாணவிகள் வகுப்பறையில் மயங்கி விழுந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவிகள் மணிமேகலை, சினேகா ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story