வேலூர் மாவட்டத்தில் 10 பஸ்களின் கண்ணாடி உடைப்பு பயணிகள் காயம்
வேலூர் மாவட்டத்தில் 10 பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பயணிகள் சிலர் காயம் அடைந்தனர்.
குடியாத்தம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பா.ம.க., காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கடை அடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கிராமப்புற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.
நேற்று அதிகாலையில் கொத்தூரில் இருந்து பரதராமி வழியாக குடியாத்தம் நோக்கி வந்த தனியார் பஸ் அனுப்பு பகுதியில் கல்வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
இதேபோல சித்தூர் மாவட்டம், பலமனேரில் இருந்து குடியாத்தம் நோக்கி ஆந்திர மாநில அரசு பஸ் சூராளூர் அருகே வந்தபோது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கின.
மேலும் மோர்தானாவில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் எஸ்.மோட்டூர் அருகே கல்வீசி தாக்கப்பட்டது. இதனால் பஸ்சின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடிகள் சேதமடைந்தன.
அதுபோல குடியாத்தம் அருகே வந்த தனியார் மினி பஸ்சும், பலமனேர் ரோட்டில் தனியார் ஷூ கம்பெனி பஸ்சும், பேரணாம்பட்டு ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்சும் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த சம்பவங்களில் பயணிகளில் சிலர் லேசான காயம் அடைந்தனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து குடியாத்தத்தில் இருந்து பரதராமி வழியாக செல்லும், சித்தூர் செல்லும் பஸ்களும், அதேபோல் குடியாத்தத்தில் இருந்து பலமனேர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
பரதராமி மற்றும் பலமனேர் செல்லும் சாலையில் எந்தவித பஸ்களும் இயக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
நேற்று மதியம் பரதராமி மற்றும் சைனகுண்டா வழிதடங்களில் பஸ்கள் இயக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடியாத்தம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அவர்கள் போலீசாரிடம் பஸ்களை இயக்க வலியுறுத்தினர். கல்வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம், வடுகந்தாங்கல், லத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும் நாட்டறம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த தனியார் பஸ்சின் கண்ணாடி பா.ம.க. அலுவலகம் அருகிலும், திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சின் கண்ணாடி லாரிசெட் என்ற இடத்திலும், திருப்பத்தூரில் இருந்து சந்தூர் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சின் கண்ணாடி அவுசிங்போர்டு பகுதியிலும் உடைக்கப்பட்டன.
இதே போல ஆற்காட்டில் இருந்து போளூருக்கு தனியார் பஸ் வந்தது. காவனூர் அருகே பஸ் வந்தபோது, பஸ்சின் பின்புற கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. மேலும் பஸ்சில் பயணம் செய்த காவனூரை சேர்ந்த பெண் ஒருவர் காயம் அடைந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் பஸ் டிரைவர் சேட்டு பஸ்சை கொங்கராம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பஸ் பணிமனையில் நிறுத்திவிட்டார். அதைத் தொடர்ந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். பின்னர் பயணிகள் கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் இருந்து வேறு பஸ்சில் சென்றனர்.

Related Tags :
Next Story