இலங்கை கோர்ட்டு விடுதலை செய்த தமிழக மீனவர்கள் 27 பேர் காரைக்கால் வந்தனர்


இலங்கை கோர்ட்டு விடுதலை செய்த தமிழக மீனவர்கள் 27 பேர் காரைக்கால் வந்தனர்
x
தினத்தந்தி 12 April 2018 4:15 AM IST (Updated: 12 April 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கோர்ட்டு விடுதலை செய்த தமிழக மீனவர்கள் 27 பேர் நேற்று மாலை காரைக்கால் வந்தனர்.

காரைக்கால்,

புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள், ராமேசுவரத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள் என மொத்தம் 27 மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் வழக்கம்போல் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை எல்லையில் நுழைந்து மீன் பிடித்ததாக கூறி 27 மீனவர்களையும் கைது செய்தனர்.

மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் 27 மீனவர்களையும் இலங்கை கோர்ட்டு, அண்மையில் விடுதலை செய்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்பில் இருந்த 27 மீனவர்களை நேற்று இலங்கை கடற்படை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படையினர் வசம் ஒப்படைத்தனர்.

காரைக்கால் வந்தனர்

இதனையடுத்து இந்திய கடற்படையினர் 27 மீனவர் களையும் நேற்று மாலை காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் நாகப்பட்டினம் மற்றும் ராமேசுவரம், திருச்சி மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் 27 மீனவர்களும் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் அவரவர் சொந்த கிராமத்திற்கு சென்றனர். 

Next Story