காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 April 2018 4:30 AM IST (Updated: 12 April 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து திருவாரூரில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் ரெயில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்் அய்யப்பன், மாவட்ட தலைவர் மனோகரன், இளைஞரணி செயலாளர் நரசிம்மன், உழவர்் பேரியக்க நிர்வாகி வேனுசக்திவேல், மாவட்ட துணைத்தலைவர் காசிநாதன், மாநில துணை செயலாளர் பழனிதங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து பா.ம.க.வினர் கோஷம் எழுப்பினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை தலைவர் சுப்பிரமணிய அய்யர் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் கவிஞர் முருகையன், உழவர் பேரியக்க மாநில செயலாளர் நெல் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் கரிகாலன், பா.ம.க. மாநில பொது செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன், நகர செயலாளர் கல்விபிரியன் நீதிராஜா, மாவட்ட செயலாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட அமைப்பு செயலாளர் சீனி.தனபாலன், முன்னாள் நகராட்சி உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்ட இளைஞரணி நிர்வாகி சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். 

Next Story